பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு Y+ பாதுகாப்பு வழங்க மகாராஷ்டிரா காவல்துறைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது .
பாலிவுட் திரையுலகின் பாஷாவாக வலம் வரும் நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் அட்லீயின் இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படம் அண்மையில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி படமாக உருவெடுத்தது .
திட்ட தட்ட 1000 கோடிக்கும் மேல் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்திய ஜவான் படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் ஷாருக்கானுக்கு அதிகளவில் கொலை மிரட்டல்கள் வருவதாக கூறப்படுகிறது .
இதனை கருத்தில் கொண்டு இந்திய சினிமாவின் பெரும் புள்ளியான நடிகர் ஷாருக்கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க மகாராஷ்டிரா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது .
பதான் மற்றும் ஜவான் படங்களுக்கு பின் தனக்கு அதிகளவில் கொலை மிரட்டல்கள் வருவதாக நடிகர் ஷாருக்கான் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்த நிலையில் மகராஷ்டிரா காவல்துறை ஷாருக்கானுக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது
அதல பாதாளத்திற்கு சென்ற பாலிவுட் சினிமாவை பதான் மற்றும் ஜவான் ஆகிய சூப்பர் ஹிட் படங்களின் மூலம் மீண்டும் தலைதூக்க வைத்த ஷாருக்காருனுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதால் அவரது ரசிகர்கள் பெரும் மனவருத்தத்தில் உள்ளனர் .