தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைகான மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்றும் நாளையும் 7 முதல் 11 செமீ மழைக்கு வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் ஆக. 14, 15 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 91% கூடுதலாக பெய்துள்ளதாக .
2024 ஜூன் மாதத்தில் இருந்து பெய்யும் மழையின் அளவு 147.9 மி.மீ. இயல்பை விட 283.3 மி.மீ. அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கேரளாவில் இன்று கனமழை பெய்யும் என்றும், நாளை மறுநாள் (ஆக. 14) வரை மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது .
திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்-ம், இடுக்கி, மலப்புரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்-ம் விடுக்கப்பட்டுள்ளது.