ஈரோடு மாவட்டத்தில், இளைஞர் ஒருவர் காதலுக்கு மறுப்பு தெரிவித்த பள்ளி மாணவியின் கழுத்தை பிளேடால் (blade) அறுத்ததில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மாணவியை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா. இவர், சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரும் பவானிசாகர் இலங்கை தமிழர் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த நவீன் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின், காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து பவானிசாகர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்தார்.
இதனையடுத்து, போலீசார் நவீனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்ததும் நவீன் மாணவி ஸ்வேதாவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வழக்கம் போல பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை பின்தொடர்ந்து வந்து ஸ்வவேதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, மாணவியை வழிமறித்த இளைஞர் திடீரென பிளேடால் (blade) வலுக்கட்டாயமாக மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார்.
இதில், பலத்த காயமடைந்த மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதை பார்த்த இளைஞர் அங்கிருந்து தப்பித்தார்.
இதனையடுத்து, ரத்த வெள்ளத்தில் மாணவி சரிந்ததையடுத்து மாணவியை மீட்ட பொதுக்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், இது குறித்து பவானிசாகர் போலீசார் தலைமறைவாக உள்ள நவீன் என்பவரை தேடி வருகின்றனர்.