கன்னியாகுமரி அருகே திருமணமான ஆறு மாதங்களிலேயே இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் கோயில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாபு (56).இவருக்கு சுருதிபாபு (24) என்ற மகளும் விஷால் என்ற மகனும் உள்ளனர் . இந்நிலையில் மகள் சுருதிபாபுவை குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே நாகராஜன் – செண்பகவல்லி தம்பதியரின் மகன் கார்த்திக் என்பவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள்.
திருமணம் முடிந்து பல கனவுகளுடன் தனது கணவர் வீட்டில் வாழ வந்த சுருதிபாபுவை அவரது மாமியார் மனரீதியாக மிகவும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. தனது மகனுடன் சுருதிபாபு வெளி இடங்களுக்கு ஒன்றாக சேர்ந்து செல்லவும் மறுப்பு தெரிவித்தாகவும் தனது மகனுடன் வீட்டில் சுருதிபாபுவை ஒன்றாக இருக்க கூட விடவில்லை என்றும் தெரிகிறது.
Also Read : கணவருக்காக விரதமிருந்து அவரையே கொன்ற மனைவி – உ.பியில் நடந்த திகில் சம்பவம்..!!
மாமியாரின் இந்த அருவருக்கத்தக்க நடவடிக்கைகளால் மனஉளைச்சல் அடைந்த சுருதிபாபு, இது குறித்து தனது தாயாருக்கு வாட்ஸ்ஆப் கால் மூலமாக தனது வேதனையை தெரிவித்துள்ளார் . இதனை அறிந்த சுருதிபாபுவின் பெற்றோர் கோவையில் இருந்து மகளை பார்த்து சமாதானப்படுத்துவதற்காக சுருதிபாபுவின் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்த நிலையில் சுருதிபாபுவின் தந்தைக்கு உங்கள் மகள் தூக்கு போட்டு இறந்து விட்டார் என கார்த்திக்கின் சகோதரி தொலைப்பேசி மூலமாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துளளார் .
மகளின் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை தனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் மாமியார் கொடுமைபடுத்தியுள்ளதாகவும் கூறி சுசீந்திரம் காவல் நிலையத்தில் சுருதிபாபுவின் தந்தை புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் சுருதிபாபுவின் இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.