ஸ்மார்ட்போன் கையில் இல்லாதபோது 50% இளைஞர்கள் கவலைக்குள்ளாவதாக ( SmartPhone ) பிரபல செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
13-18 வயதுடைய 2,000 இளைஞர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருக்கும்போது அமைதியை உணர்வதாகவும், தங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வருவதுடன், குடும்ப உறவு மேம்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஸ்மார்ட்போன் கையில் இல்லாத நேரத்தில் நன்கு உறங்குவதுடன், தங்களது நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட்டுள்ளனர்.
ஸ்மார்ட்போன் உபயோகிக்காமல் இருக்கும் Challenge-ல் பங்கேற்ற இளைஞர்கள் நிறைய புதிய விஷயங்களை கற்பதுடன், பலருடன் எளிதாக உரையாடுகின்றனர்
தங்களின் கற்பனைத்திறன் மீண்டும் செயல்பட தொடங்கியதாக உணர்கின்றனர்
ஸ்மார்ட்போன் இல்லாத நேரத்தில் தங்களின் Snap Streak குறித்து கவலைக்குள்ளாவதாகவும், இணைய உலகத்தின் ( SmartPhone ) தொடர்பில் இருந்து வெளியேறிவிடுவோம் எனவும் இன்றைய நவீன கால இளசுகள் பயப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.