செவ்வாழை பயன்கள் :
செவ்வாழையில் பொட்டாசியம், மெக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, தையமின், ஃபோலிக் ஆசிட், பீட்டா கரோட்டின் என மனித உடலுக்கு தினசரி தேவைப்படும் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் நிறைந்துள்ளது.
ஒரு செவ்வாழையில் 400 mg பொட்டாசியம் உள்ளது. ரத்த ஓட்டம் சீராகிறது. சிறுநீரகம் சிறப்பாக செயல்படுவதுடன், எலும்புகளின் தேய்மானத்தை தடுக்க செய்கிறது.
இதையும் படிங்க : மணிகண்டனின் ‘லவ்வர்’ ட்ரெய்லர்.. டாக்சிக் காதல்!!
செவ்வாழையின் தோலிலுள்ள மெலட்டோனின் என்ற மூலப்பொருள், ஆண்களுக்கு பிறப்புறுப்பு புற்றுநோய், மற்றும் மார்பக புற்றுநோயை தடுக்கும். பிறப்புறுப்பு புற்று நோய் செல்களையும் அழிக்கும்.
ஒருநாளைக்கு 2 செவ்வாழை என 48 நாள் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கான நரம்புகள் பலம்பெற்று, ஆண்மைக் கோளாறுகள் நீங்கி விடும்.
செவ்வாழைப்பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி. ஒருவேளை இந்த நேரத்தில் முடியாவிட்டால் பகல் 11 மணிக்கு சாப்பிடலாம்.
மாலைக் கண் நோய் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
இதையும் படிங்க : இறால் தொக்கு.. ஆவி பறக்க சுட சுட சாதத்துடன் ட்ரை பண்ணி பாருங்க!!
பல்வலி மற்றும் பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து 7 நாட்களுக்கு சாப்பிட்டு வர சரும நோய் குணமடையும்.
தினமும் காலையில் ஒரு செவ்வாழைப் பழத்தை சாப்பிட வர அது குடலைத் தூண்டி கழிவை வெளியேற்ற வைக்கும்.
அதேபோல மாலை 4 மணிக்கு சாப்பிடலாம். சாப்பிட்டவுடன் செவ்வாழையை சாப்பிட்டால் இதனுடைய முழு சத்துகளும் நமக்குக் கிடைக்காமல் போய் விடும்.