பிப்ரவரி 16 : மாத தொடக்கத்தில் ஏற்றம் கண்ட தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை ஏற்றம், தங்கத்தில் முதலீடு செய்யும் அனைவரையும் பிரமிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.
பொதுவாக எந்த சொத்தும் விலை ஏற்ற இறக்கத்திற்கு உட்பட்டதுதான். அதில் தங்கமும் அடக்கம்.
மக்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை பாரம்பரியமாக விரும்புகிறார்கள், ஏனெனில் இது பாதுகாப்பான முதலீடு என்பதனால்.
அதுமட்டுமல்லாமல், காலப்போக்கில் இது மற்ற சொத்து வகுப்புகளுடன் ஒப்பிடும்போது நிலையான வருமானத்தை வழங்குகிறது.
மேலும், அன்றைய காலகட்டத்தில் தங்கம் உள்ள விலையியில் விற்க எளிதானது.
நேற்று (15.01.24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5,740-க்கு விற்பனை செய்யபட்டது.
மேலும், 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ரூ.45,920க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இதையும் படிங்க : ராஜினாமா செய்வாரா பிரதமர் மோடி – Minister criticize
இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,760-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (15.01.24), 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து ஒரு கிராம் ரூ.4,696 ஆகவும், சவரனுக்கு ரூ. 112 குறைந்து ஒரு சவரன் ரூ.37,568 விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று 18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 4,718-க்கும் சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ. 37,744-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.00 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,
இன்று, வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.77க்கும் ஒரு கிலோ ரூ.77,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது (பிப்ரவரி 16).