பெட்ரோல் டீசல் மீதான தமிழ்நாடு மாநில அரசின் வரி குறைப்பு

Spread the love

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெடகூட்டத் தொடர் சட்டபேரவை தலைவர் அப்பாவு தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லாத நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசினார்.

தமிழக பட்ஜெட் அறிக்கையில், தமிழக காவல் துறையில் 14,317 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும், தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டம் 150 நாள்களாக உயர்த்தப்படும், சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.20,000 கோடி கடன் வழங்கப்படும், பெட்ரோல் மீதான வரியில் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் உள்ளிட்ட பல முக்கிய விடையங்கள் இந்த அறிக்கையில் நிதி அமைச்சசர் பழனிவேல் தியாகராஜனால் முன்வைக்கப்பட்டது.
இந்தியாவில் சமீபத்திய மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை கட்டுகடங்காமல் அதிகரித்து 100 ரூபாயினை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

கச்சா எண்ணெய் விலை ஏற்றம் இதற்கு ஒரு காரணமாக இருந்தாலும் மறுபுறம் எரிபொருட்கள் மீதான வரியும் முக்கிய காரணமாக இருக்கிறது. அதேவேளை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையானது பலத்த வீழ்ச்சியினை கண்டபோதும் அதன் பலன் இந்திய மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 3 ரூபாயாக குறைக்கப்பட்ட விடையம் பலரின் கவனத்தை ஈர்த்தது

Desel

இவ்வாறு இருக்கும் நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பாக பெட்ரோல் மீதான வரி குறைப்பு பார்க்கப்படுகிறது.
இந்த அறிக்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழக்கத்தில் பெட்ரோல் விலையானது 100 ரூபாய்க்கும் கீழாக குறைய வாய்ப்புள்ளது. இது சாமனியர்களுக்கு மிக நல்லதொரு அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலை குறைப்பினால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 1,160 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெட்ரோல், டீசலின் அதிகப்படியான விலை உயர்வு பெரும் தடையாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும், மத்திய அரசு தொடர்ந்து அதிகப்படியான விலையிலேயே விற்பனை செய்து வருகிறது
இந்த நிலையிலும் மாநில அரசுக்கு பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பில் கிடைக்கும் வரி வருமான அளவுகள் குறைந்துள்ளதாக இன்று பட்ஜெட் தாக்கலின் போது தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளது.

petrol

அதிகளவிலான எதிர்பார்ப்புகள் மத்தியில் இன்று தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையின் துவக்கத்திலேயே, நடப்பு நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு மட்டுமே இந்த வலுவான பட்ஜெட் பொருந்தும் எனத் தெரிவித்துள்ளது.

வெள்ளை அறிக்கை வெளியிட்ட பின்பு தமிழ்நாட்டின் நிதிநிலையைச் சரி செய்ய 3 ஆண்டுகள் ஆகும். ஓராண்டில் சரி செய்ய முடியாத அளவுக்குப் பணிகள் மிகக் கடுமையாக உள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மத்திய அரசின் எரிபொருள் மீதான வரி விதிப்பு குறித்துப் பேசிய பழனிவேல் தியாகராஜன் பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரி விதிப்பு கூட்டாட்சியை நீர்த்துப் போகச் செய்கிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் வரி விதிப்பின் மூலம் பெட்ரோல் டீசல் மீது மத்திய அரசுக்கான வரி வருமானம் அதிகரித்தும், மாநில அரசுக்கான பகிர்வுக்கான வரி அளவு குறைந்துள்ளது.

பெட்ரோல் டீசல் மீதான மத்திய அரசின் மேல்வரிகள் குறிப்பிட்ட நோக்கத்துக்காக முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை எனச் சிஏஜி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது எனவும் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


Spread the love
Related Posts