நடிகர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்க உள்ள ‘விருமன்’ படத்தின் மூலம் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.
2015ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி, இயக்குனர் முத்தையா கூட்டணியில் வெளியான திரைப்படம் ‘கொம்பன்’ வழக்கமான முத்தையா படங்களுக்கே உரித்தான கிராமத்து கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த படத்துக்குப் பிறகு நடிகர் கார்த்தி, இயக்குனர் முத்தையா கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. 2டி எண்டெர்டெய்ன் நிறுவனம் சார்பில் சூர்யா – ஜோதிகா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ‘விருமன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர்
இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் அறிமுகமாகிறார். அதிதி இடம்பெற்றுள்ள ‘விருமன்’ பட போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் சூர்யா ‘அதிதி ஷங்கரை வரவேற்கிறேன்! நீ அனைவரது இதயங்களையும் வெல்லப் போகிறாய். கடவுள் ஆசிர்வதிக்கட்டும். உன் வரவு நல்வரவு ஆகுக’ என்று குறிப்பிட்டுள்ளார்
https://twitter.com/Suriya_offl/status/1434538284974153732?s=20
தமிழ் திரையுலகை ஆட்சி செய்யும் இயக்குனர் சங்கரின் மகள் அவர் பாணியில் தனது ரசிகர்களை கட்டி ஆட்சி செய்வார என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.