மசாஜ் சென்டர்களில் நடக்கும் அத்துமீறல்களும்.. ஆபத்துகளும்..
சமீபத்தில் சென்னையில் செயல்படும் 150 க்கும் மேற்பட்ட ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 64 ஸ்பா மற்றும் மசாஜ் செண்டர்கள் சட்டவிரோதமானவை என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், மசாஜ் தெரபிஸ்டும், அழகுகலை நிபுணருமான இனியன் முருகானந்தம் என்பவர் ஐ தமிழ் சேனலுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை பகிர்ந்துள்ளார்.
நேர்காணலில், மசாஜ் சென்டரில் நடக்கும் அத்துமீறல்கள் என்னென்ன? அதில், நீங்கள் பார்த்து கடந்துவந்த சிக்கல்கள் என்னென்ன? என்று தொகுப்பாளர் கோபிநாத் கேட்ட கேள்விகளுக்கு இனியன் முருகானந்தம் அளித்துள்ள பதில்கள் பின்வருமாறு..
சலூன்களை பொருத்தவரையில் சிறிய அளவிலான சலூன்கள் தவிர, பெரிய பெரிய அளவிலான சலூன்களும் இருக்கிறது. அதில், ஆல்ரவுண்டர் என்ற ஒரு கேட்டகிரியினர் இருக்கின்றனர் (மசாஜ் சென்டர்களில் நடக்கும் அத்துமீறல்களும்.. ஆபத்துகளும்).
அதை பொறுத்து தான் ஒருவரை வேலைக்கு எடுப்பார்கள். ஆல்ரவுண்டர் என்றால் மசாஜ், மேக் அப், ஹேர் ஸ்டைலிஸ்ட் என்ற பலவகையான வேலைகளும் தெரிந்திருக்க வேண்டும்.
மசாஜ் சர்வீஸை பொருத்தவரையில், ஹோம் சர்வீஸ்க்கு அழைப்பவர்கள் தான் அத்துமீறல்களில் ஈடுபடுவார்கள். அவர்கள் ஆல்ரவுண்டர் கேட்டகிரியில் இருக்கும் ஒரு நபரை தான் தேர்ந்தெடுத்து கூப்பிடுவார்கள்.
முதலில் பார்லருக்கு வந்து நாங்கள் கொடுக்கும் சர்வீஸ் அனைத்தையும் பார்த்துவிட்டு, அதில் ஒருவரை தேர்ந்தெடுத்து தான் ஹோம் சர்வீஸிற்கு கூப்பிடுவார்கள்.
ஆனால், அவ்வாறு ஹோம் சர்வீஸ்க்கு கூப்பிடுபவர்களில் எல்லோருமே தவறாக நடந்து கொள்வதில்லை. 100-ல் 30 சதவீதம் பேர் மட்டுமே இந்த மாதிரியான தவறான அத்துமீறல்களில் ஈடுபடுகிறார்கள்.
ஒரு முறை தொலைபேசி அழைப்பு ஒன்று எனக்கு வந்தது. எதிர் முனையில் பேசியவர் சரளமாக ஆங்கிலத்தில் பேசினார். அவர் ஒரு பெண். அதன்பின்னர், நான் நேரடியாக அவர் கொடுத்த முகவரிக்கு சென்ற போது அங்கு இரண்டு பெண்கள் இருந்தனர்.
அவர்களின் உடைகள், பேச்சு வார்த்தை இவைகளை எல்லாம் பார்க்கும் பொழுது அவர்கள் லெஸ்பியன் உறவில் இருப்பவர்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதன்பின்னர், அவர்கள் என்னை உள்ளே வரச் சொல்லி ஒரு இருக்கையில் அமர சொன்னார்கள்.
பின்னர் நான் அவர்களிடம் மசாஜ் செய்ய துவங்கலாமா? என்று கேட்டதற்கு சிறிது நேரம் காத்திருங்கள் என்று கூறினார்கள். பிறகு, அதில் ஒருவர் சென்று ஒரு பெட்டியை திறந்தார். அந்த பெட்டிக்குள் செக்ஸ் டாய்ஸ்கள் நிரம்பி இருந்தது.
அதைத்தொடர்ந்து அந்த இரண்டு பெண்களும் சேர்ந்து மது அருந்தினார்கள். நான் மீண்டும் ஒருமுறை மசாஜ் செய்ய துவங்கலாமா? என்று கேட்டதற்கு நீங்கள் மசாஜ் எல்லாம் செய்ய வேண்டாம். அதே இடத்தில் அமர்ந்து எங்களை கவனித்தால் போதும் என்று கூறி விட்டார்கள்.
நானும் இதனால் பெரிய பிரச்சனை எதுவும் வரப்போவதில்லை. இருவருமே பெண்கள் என்ற நம்பிக்கையில் அங்கேயே இருந்து என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்காக அமர்ந்து விட்டேன். மது அருந்தி முடித்ததும், நான் என்னை தான் மசாஜ் செய்ய அழைக்கப் போகிறார்கள் என்று நினைத்திருந்த நேரத்தில்,
அவர்களே ஒரு பெண்ணிற்கு மற்றொரு பெண் மசாஜ் செய்ய ஆரம்பித்தார். மேலும், அவர்கள் மசாஜ் செய்வதை நான் பார்க்கும்படி கூறினார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களில் ஒரு பெண் என்னை அடிக்கும் படி மற்றொரு பெண்ணிடம் கூறுகிறார்.
உடனே அந்த பெண் எழுந்து வந்து என் கைகளை கட்டி விட்டு, என்ன அடித்துவிட்டு மீண்டும் சென்று மசாஜ் செய்கிறார். எல்லாம் முடிந்த பின்னர் எனக்கான பணத்தை கொடுத்துவிட்டு, என்னிடம் அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டதற்கு மன்னிப்பும் கேட்டனர்.
அதேபோல மற்றொரு பெண் ஒருவரும் எனக்கு போன் செய்து, மசாஜ் செய்ய என்ன எண்ணெண்யை பயன்படுத்துவீர்கள்? என்ற கேள்விகளெல்லாம் கேட்டுவிட்டு, எனக்கு பெட்ரோல் அல்லது டீசலில் மசாஜ் செய்ய வேண்டும் என கேட்டார்.
இதையெல்லாம் விட ஒரு பெரிய சம்பவம் என்னவென்றால்.. ஒரு பெண்ணின் கணவர் அவருக்காக நேரம் ஒதுக்காமல் அவரது வேலையில் பிசியாக இருந்துள்ளார்.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், எனக்கு கால் செய்து வரச்சொல்லி ஒரு நாள் முழுவதும் என்னை ஆள் நடமாட்டம் இல்லாத, நிழலுக்கு கூட ஒதுங்க முடியாத அளவுக்கு ஒரு இடத்தில் காத்திருக்க சொல்லி,
ஒரு காரில் இருந்து என்னை நோட்டமிட்டபடி சுற்றிக்கொண்டிருந்தார். அவ்வளவு வெயிலிலும் குடிக்க தண்ணீர் கூட அங்கு கிடைக்காது. கணவர் மீது இருந்த கோபத்தை என் மீது காட்டி தீர்த்துக்கொண்டார். பின்னர், அதற்கு பணமும் மும்மடங்காக கொடுத்து அனுப்பினார்.
இதைப்போல, நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு நிறைய சம்பவங்கள் நடந்துள்ளது என தெரிவித்துள்ளார் இனியன்.
இதுகுறித்து, ஐ தமிழ் சேனலுக்கு இனியன் முருகானந்தம் அளித்துள்ள பேட்டி.. வீடியோ!