உடலுறவில் ஆர்வம் இல்லையா? பாலியல் உறவில் பெண்களின் செக்ஸ் டிரைவ் குறைவதற்கான பொதுவான காரணங்கள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு பெண் ஏன் உடலுறவில் ஆர்வத்தை இழக்கிறார்?
- தாம்பத்ய வாழ்க்கையில் ஒரு கட்டத்திற்குப் பிறகு, சில பெண்கள் ஒரு உறவில் உணர்ச்சியின் தீப்பொறி குறைவதை உணர்கிறார்கள்.
2. பெண்களின் பாலியல் உறவின் போது பிறப்புறுப்பில் வறட்சி ஏற்படுவதால் உடலுறவின் போது அசௌகரியம் மற்றும் வலியை ஏற்படுத்தி உச்சக்கட்டம் அடைவதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது (உடலுறவில் ஆர்வம் இல்லையா?).
இதற்கு முக்கிய காரணம் முன் விளையாட்டின் போது அப்பெண் கிளர்ச்சியடையவில்லை.
3. மார்பகம் அல்லது பிறப்புறுப்பு தொடர்பான சில அறுவை சிகிச்சைகள் அவர்களின் பாலியல் ஆசையை பாதிக்கலாம்.
இதையும் படிங்க : அமெரிக்காவில் உள்ள 1100 கோடி மதிப்பிலான சிலைகள் – முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல்!
4. உயர் இரத்த அழுத்தம், இது இருதய நோய்களுக்கான ஆபத்து ஏதேனும் இருந்தாலும் பாலியல் ஆசையின்மைக்கு வழிவகுக்கும்.
5. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் உடலுறவின் போது உச்சக்கட்டத்தை அடைவதை கடினமாக்கும். இது பெண்ணின் பாலியல் விருப்பத்தை பாதிக்கும்.
6. மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் மற்றும் தைராய்டு மருந்துகள் போன்ற சில மருந்துகள் எடுத்துக்கொள்வதும் பெண்களுக்கு குறைந்த செக்ஸ் உந்துதலை ஏற்படுத்தும்.
7. மாதவிடாய் நேரத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதன் காரணமாக பெண்கள் பெரும்பாலும் உடலுறவில் ஆர்வத்தை இழக்கிறார்கள். ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவதால் பிறப்புறுப்பு திசுக்கள் வறண்டு, உடலுறவை சங்கடமாகவும் வலியாகவும் மாற்றும்.
8. கர்ப்ப காலத்தில் அதிக அளவில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களினால் பெண்கள் பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது கடினமாக இருக்கும்.
சில பெண்கள் அதை சமாளிக்கிறார்கள், சிலர் செக்ஸ் மீதான ஆர்வத்தை இழக்கிறார்கள்.
இதையும் படிங்க : கிராமி விருதை வென்ற ‘ஷக்தி’ இசைக்குழுவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து!
9. அதிகப்படியான யோசனை “டிமென்ஷியா”, எதிர்மறை பாலியல் அனுபவங்கள், கவலை மற்றும் மனச்சோர்வு போன்றவை ஒரு பெண்ணிற்கு இருந்தால்,
அது பாலியல் நெருக்கமின்மைக்கு வழிவகுக்கும் மிகப்பெரிய காரணங்களில் ஒன்றாகும்.
10. ஒரு துணையின் தவறான நடத்தையில் இருப்பது, செக்ஸ் தேவைகள் பற்றி வெளிப்படையாகப் பேச மறுப்பது போன்றவை பெண்களின் பாலியல் ஆசையின்மைக்கு முக்கிய காரணங்கள்.
எனவே, தாமதமாகிவிடும் முன் பாலியல் உறவில் உள்ள சிக்கலைக் கண்டறிந்து, அதைத் தீர்ப்பது முக்கியம்.