குஜராத் மாநிலம் வதோதரா நகரை ஒட்டி அமைந்துள்ள ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் 14 பேர் என 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடந்த வியாழக்கிழமை அன்று 27 மாணவர்கள் உட்பட ஆசிரியர்கள் சுற்றுலா நிமித்தமாக ஹார்ணி ஏரிக்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில் 27 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயணம் செய்த படகு ஏரியில் மதியம் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியது.
இதில் 7 மாணவர்கள் மீட்கப்பட்ட நிலையில் 14 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்துக் குறித்து விசாணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் சிக்கிய படகில் 27 மாணவர்கள் பயணம் செய்ததாக வதோதரா மாவட்ட ஆட்சியர் ஏ.பி.கோர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய வதோதரா முனிசிபல் கார்ப்பரேஷன் நிலைக்குழுவின் தலைவர் ஷீத்தல் மிஸ்திரி, “படகில் சுமார் 35 பேர் இருந்தனர். ஒருவேளை படகின் அளவை தாண்டி அதிகளவு ஆட்கள் ஏறியிருக்கலாம் என கருதுகிறோம்.
இதனால், படகு சமநிலையை இழந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில் படகில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லை.
இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, தவறுகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்க: Headlines: இன்றைய தலைப்புச் செய்திகள்
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மாநில அரசு தரப்பில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
படகு கவிழ்ந்த தகவலை அறிந்து வருத்தம் அடைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
https://x.com/ITamilTVNews/status/1748258240939647298?s=20
மேலும் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 அரசு தரப்பில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சுற்றுலா சென்ற இடத்தில் படகு கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உடுரிளந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.