கோவை தொடர் குண்டுவெடிப்பில் பலியானோருக்கு நொய்யல் படித் துறையில் 26 – ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்படும் என ஸ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம்!! என்று கோவை குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு, பேரூர் நொய்யல் படித்துறையில் விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பு சார்பில் மொட்டை அடித்து, திதி கொடுக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 1998, பிப்ரவரி 14 ல், கோவையில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் அப்பாவி மக்கள் 58 பேர் பலியாகினர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், அல் உம்மா தலைவர் பாஷா உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிலருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் குண்டுவெடிப்பில் பலியான அப்பாவி மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி இறந்தவர்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக வாசிக்கப்பட்டு, நொய்யல் படித்துறையில் திதி கொடுக்கப்பட்டது.
விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் சிவலிங்கம் தலைமையில் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நொய்யல் படித்துறையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு, ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஸ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் சிவலிங்கம்,
தொடர் குண்டு வெடிப்பில் பலியான ஆத்மா சாந்தி அடைய வேண்டும். பயங்கரவாத செயல் இனி ஒருபோதும் நடக்கக்கூடாது. வருகின்ற தலைமுறைக்கு இதனை தெரியப்படுத்த வேண்டும்.
https://x.com/ITamilTVNews/status/1757706224374612187?s=20
எந்த இடத்திலே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதோ அந்த இடத்திலே நினைவுத்தையும் அமைக்க வேண்டும் என்றும், வரலாற்றை மறந்தால் அந்த நாடு முன்னேற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த பயங்கரவாத செயல்களில் பலியானவர்களுக்கு ஆர்.எஸ் புரம் பகுதியில் நினைவுத் தூண் அமைக்க வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க : bail case: செந்தில் பாலாஜி சாட்சிகளை அச்சுறுத்தக் கூடும்-அமலாக்கத் துறை
இந்த நிலையில் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும் விதமாக கோவை நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 1800-க்கும் மேற்பட்ட போலீசார் நகரின் முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.