தந்தை சொத்து : வாரிசுரிமை சட்டத்தின்படி தந்தையினுடைய சொத்துக்களில் மகன்களுக்கு எப்படி பங்கு உள்ளதோ, அதேபோல் மகள்களுக்கும் பங்கு உள்ளது.
இதில், பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் இருக்கும். குறிப்பாக தந்தை சுயமாக சம்பாதித்த சொத்துக்கள் (தந்தை சொத்து) இருந்தாலும் ஒருவேளை அவர் அதனை உயிலாக எழுதி வைக்காமல் உயிரிழந்து விட்டால் அந்த சொத்தில் பெண் பிள்ளைகளுக்கு பங்கு கிடைக்குமா?
இது தொடர்பான சந்தேகங்களை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்..
பெண் பிள்ளைகளுக்கு அப்பாக்களின் சொத்துக்களில் பங்கு நிச்சயமாக உள்ளது. திருமணமான பெண்களாக இருந்தாலும் சரி.. திருமணம் ஆகாத பெண்களாக இருந்தாலும் சரி.. எல்லோருக்குமே இது பொருந்தும்.
சட்டம் 2005ன் படி தந்தை சுயமாக சம்பாதித்த சொத்தில் அவருடைய மகனுக்கு எந்த அளவிற்கு உரிமை இருக்கிறதோ.. அதே அளவிற்கு மகள்களுக்கும் உரிமை இருக்கிறது.
ஒரு வேளை தந்தை உயில் எழுதி வைக்காமல் உயிரிழந்து விட்டாலும் கூட, சட்டபூர்வ வாரிசுகள் என்ற கருதப்படும் நேரடி வாரிசுகளுக்கு பாலின வேறுபாடுகள் இல்லாமல் அந்த சொத்தில் சம பங்கு உள்ளது.
ஆனால், ஒரு திருமணமான பெண்ணின் தந்தை அவர் சுயமாக சம்பாதித்த சொத்தினை வேறு யாருக்காவது உயில் எழுதி வைத்திருந்தால், அதில் பங்கு கேட்க முடியாது.
ஆனால், அதே வேலை சுய சம்பாத்தியமாக இல்லாமல் பூர்வீக சொத்தாக அது இருந்தால் அதில் அந்த வாரிசுகளுக்கு நிச்சயம் பங்கு உள்ளது.
பொதுவாக சுயமாக சம்பாதித்து சொத்து சேர்த்து வைக்கும் தந்தைகள் தங்களுடைய காலத்திற்குப் பிறகு பிள்ளைகளிடையே சொத்து பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உயில் எழுதும் பழக்கத்தை வழக்கமாக வைத்துள்ளனர்.
இதையும் படிங்க : https://x.com/ITamilTVNews/status/1747161730705465844?s=20
இதற்காக, உயிரோடு இருக்கும்போதே யாருக்கு எந்த அளவு சொத்து என்று அந்த உயிலில் எழுதி வைத்து விடுவார்கள்.
இதில், மற்றொரு முக்கியமான சந்தேகம் என்னவென்றால்? ஒரு பெண்ணிற்கு விவாகரத்து ஆன பிறகு அவருக்கு மறுமணம் ஆகாத பட்சத்தில் அந்த பெண்ணின் மகனுக்கு கணவருடைய பூர்வீக சொத்தில் பங்கு உள்ளதா? என்ற சந்தேகம்.
அதாவது, வாரிசுரிமை சட்டத்தின்படி பூர்வீக சொத்தில் அனைத்து நேரடி வாரிசுகளுக்குமே பங்கு உள்ளது.
எனவே, விவாகரத்து ஆகி இருந்தாலும்.. முன்னாள் கணவர் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து அவருக்கு பிள்ளைகள் இருந்தாலும்.. முதல் மனைவியின் மகனுக்கு அவருடைய பூர்வீக சொத்தில் அங்கு உள்ளது.