தமிழர் கலாச்சாரம் : இந்தியாவில் பண்டிகைகளுக்கும், பாரம்பரிய விளையாட்டுகளுக்கும் எப்போதுமே பஞ்சமே இருக்காது.
பெரும்பாலும், பண்டிகைகளுடன் இணைந்து வருவது இந்த வீர விளையாட்டுகள் தான்.
அதிலும் தமிழர்களின் பெருமை பேசும் பல பாரம்பரிய விளையாட்டுகள் இன்றும் கொடிகட்டி பறக்கின்றது. ஜல்லிக்கட்டு அதில் ஓன்று .
இது எருது விடுதல், ஏறு தழுவுதல், மஞ்சு விரட்டு என்று பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. தமிழா்களின் இந்த பாரம்பரிய விளையாட்டு 5,000 ஆண்டுகள் பழமை கொண்டுள்ளது.
பண்டைக் காலத்தில் தமிழா்களின் வீரத்தை நிலைநாட்டுகிற பெருமையில் ஒன்றாக ஜல்லிக்கட்டு இருந்துள்ளது (தமிழர் கலாச்சாரம்). விஜயநகர நாயக்கா்களின் ஆட்சியின்போது ‘ஜல்லிக்கட்டு’ என்ற பெயா் உருவானது.
அதற்கு முன்பு ‘ஏறு தழுவுதல்’ என்ற பெயரே இருந்துள்ளது. ‘சல்லி’ என்பதன் திரிபே ‘ஜல்லி’ என அழைக்கப்படுகின்றன.
காளையின் கொம்பில் சல்லிக் காசுகள் கட்டப்படுவதால் அது ‘சல்லிக்கட்டு’ என அழைக்கப்பட்டு பின்னா் ‘ஜல்லிக்கட்டு’ என்று மாற்றப்பட்டது .
அதாவது, இவ்விளையாட்டில், காளைகளின் கொம்புகளில் சில்லறைக் காசுகளைக் கட்டி ஓடவிடுவர். அவற்றை அடக்கி, அக்காசுகளை அவிழ்த்தெடுப்பதே ஜல்லிக்கட்டு ஆகும்.
அந்த வழியில் தற்போது நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டில் பலவித மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : https://x.com/ITamilTVNews/status/1743522252531056979?s=20
பழங்காலத்தில் ‘ஏறு தழுவுதல்’ என்ற பெயரில் அழைக்கப்பட்ட இவ்விளையாட்டில், காளையை அடக்குபவருக்கு, பெண்களை மணமுடித்தும் கொடுக்கும் பழக்கமும் வழக்கத்தில் இருந்துள்ளது.
பழமையான நாகரிகங்களிலும், சங்க இலக்கியங்களிலும் ஏறு தழுவுதல் விளையாட்டு நடைபெற்றதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், தற்போது ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு முதன் முறையாக இந்த ஆண்டு முதல் இன்சூரன்ஸ் வசதியை மதுரை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
அதன்படி, ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு அரசு தரப்பில் ரூ.2 லட்சம் இன்சூரன்சு செய்யப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் பார்வையாளர்களும் அவரவர் பாதுகாப்புக்கு ரூ.330 இன்சூரன்ஸ் செய்யலாம். இவர்களுக்கு 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
“பிரதான்மந்திரி சுரக்ஷா பீமாயோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.12 செலுத்தி ரூ.2 லட்சம் இன்சூரன்ஸ் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாடுபிடிக்கும் வீரர்கள் அனைவருக்கும் இந்த இன்சூரன்ஸ் வசதி செய்யப்படுகிறது. மேலும் இதை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்குகள் இல்லாத மாடுபிடி வீரர்களுக்கு இன்று வங்கி கணக்குகளையும் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.