தை பொங்கல் வந்தாச்சு.. பொங்கல் அப்டீனா என்ன?
பொங்கல் என்பதற்கு “பொங்கி வழிதல்” என்று பொருள். அதாவது ஒரு புதிய பானையில், பச்சரிசியிட்டு, அந்த அரிசியில் இருந்து பால் பொங்கி வழிந்து வரும்.
அதுபோல, தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி செழிப்பாகவும், வளமாகவும் இருக்கும் என்பது நம்பிக்கை.
மார்கழியின் கடைசி நாள் போகி பண்டிகை எனவும், இந்திர விழா என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில், இந்த 2024ம் ஆண்டில் ஜனவரி 14 ஆம் தேதி போகிப் பண்டிகை துவங்கி, ஜனவரி 17 ம் தேதி காணும் பொங்கல் வரை மொத்தம் நான்கு நாட்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகளும் படு ஜோராக நடைபெற்று வரும் நிலையில், மக்கள் பொங்கல் பண்டிகையை உறவுகளுடன் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர்.
வழக்கமாக பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதிதான் வரும். ஆனால் இந்த வருடம் ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
பொங்கல் வைக்க நல்ல நேரம் & தேதி :
- ஜனவரி 14ஆம் தேதி போகிப் பொங்கல் (மார்கழியின் கடைசி நாள்)
- ஜனவரி 15ஆம் தேதி சூரிய பொங்கல் (தை மாதம் 1ஆம் தேதி)
காலை 6.30 முதல் 7.30 வரை அல்லது 9.30 முதல் 10.30 மணி வரை பொங்கல் வைக்கலாம்.
தை பொங்கல் அன்று மக்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, புது ஆடைகள் அணிந்து சூரியபகவானை வழிபடுவார்கள்.
பின்னர் தங்கள் வீட்டின் வாசலில் அல்லது திறந்த வெளியில் கோலமிட்டு அதன் மேல் செங்கற்களை வைத்து அடுப்பு கூட்டி, மஞ்சள் மற்றும் குங்குமம் தடவிய பாத்திரத்தில் புதிய மஞ்சள் இலைகள் கட்டி சூரிய உதயத்திற்கு முன் பொங்கல் வைப்பார்கள்.
அந்த பொங்கல் பொங்கி வழியும் போது, மக்கள் “பொங்கலோ பொங்கல்” என்று மகிழ்ச்சியாகவும் சத்தமுடனும் கூறுவார்கள்.
இதையும் படிங்க : https://x.com/ITamilTVNews/status/1745789643541663885?s=20
- ஜனவரி 16ஆம் மாட்டுப் பொங்கல் (தை மாதம் 2ஆம் தேதி)
மாட்டுப் பொங்கல் அன்று தங்கள் வீடுகளில் வளர்த்து வரும் ஆடு மாடுகளை குளிப்பாட்டி, உடல் முழுவதும் வண்ண வண்ண பொட்டுகள் வைத்து, கொம்புகளில் வண்ணம் தீட்டி, மாலையிட்டு அலங்காரம் செய்து பொங்கல் வைத்து படையலிடுவார்கள்.
காலை 11.00 முதல் மதியம் 01.00 மணி வரையான நேரத்தில் பொங்கல் வைக்கலாம்.
- ஜனவரி 17ஆம் காணும் பொங்கல்.