ரேஷன் கடைகள் நாளை செயல்படும் : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏதுவாக,
நாளை (12.01.24) வெள்ளிக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பணி நாளாக தெரிவிக்கப்பட்டுள்ளது (ரேஷன் கடைகள் நாளை செயல்படும்).
தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் கொண்டாட ஏதுவாக அரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவற்றுடன் ரூ 1000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த வருடம் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ 1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி,
ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, திராட்சை, முந்திரி, ஏலக்காய் வழங்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : https://itamiltv.com/two-special-trains-announcement-of-two-special-trains-on-the-occasion-of-pongal-festival-tamil-nadu-news-viral/
முன்னதாக, மத்திய மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை பணியாளர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள்,எந்த பொருளும் பெறாத அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு கிடைக்காது என அறிவிக்கப்பட்டது.
இதனால், மக்கள் அதிருப்தியடைந்த நிலையில், பின்னர் அந்த அறிவிப்பு திருத்தியமைக்கப்பட்டது. அதாவது, வருமான வரி செலுத்துவோர், மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்கள்,
சர்க்கரை மற்றும் பிற வகை ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களும் இந்த பரிசு பொருட்கள் மற்றும் பணம் பெற வழி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் ஹர் சஹாய் மீனா அவர்கள் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உள்ளிட்டோருக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் ஹர் சஹாய் மீனா அனுப்பியுள்ள அந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது..
இதையும் படிங்க : https://x.com/ITamilTVNews/status/1745321316289524197?s=20
“பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏதுவாக நாளை (வெள்ளிக்கிழமை) அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பணி நாளாக தெரிவிக்கப்பட்டது.
அதற்கு ஈடாக வருகிற 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.