விமான கதவு : நடுவானில் திடீரென பெயர்ந்து விழுந்த விமானத்தின் கதவு.. அலறிய பயணிகள்..
அமெரிக்காவின் போர்ட்லேண்டில் நடுவானில் விமான கதவு பெயர்ந்து, பறந்து சென்றது. இதனை பார்த்த பயணிகள் அதிர்ச்சியில் அலறினர்.
இந்த போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் இதுவரையிலும் சுமார் 145 முறை விமான பயணத்தில் ஈடுபட்டு உள்ளது என பிளைட்ராடார் 24 என்ற விமான இயக்க கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் போர்ட்லேண்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் ரக விமானம் ஒன்று நேற்று மாலை புறப்பட்டு சென்றது.
அந்த விமானத்தில் சுமார் 171 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்கள் இருந்துள்ளனர்.
இதையும் படிங்க : https://x.com/ITamilTVNews/status/1743548163263488208?s=20
இந்நிலையில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானத்தினுள் இருந்த பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
விமானம் நடுவானில் 16,325 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது கொண்டிருந்தபோது, திடீரென விமானத்தின் மைய பகுதியில் இருந்த கதவு பெயர்ந்து, பறந்து சென்றது. இதனை பார்த்த பயணிகள் அதிர்ச்சியில் அலறி கூச்சலிட்டனர்.
விமானத்தினுள் இருந்த பயணிகளில் சிலர் இதனை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். அதையடுத்து உடனடியாக விமானம் போர்ட்லேண்ட் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
நேற்றிரவு விமானம் அங்கு பாதுகாப்பாக அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் 11-ந்தேதி முதல் வர்த்தக பயன்பாட்டுக்கு வந்த இந்த போயிங் ரக விமானம் இதுவரை சுமார் 145 முறை விமான பயணத்தில் ஈடுபட்டு உள்ளது என பிளைட்ராடார் 24 என்ற விமான இயக்க கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது.
இதுபற்றி அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் கூறியிருப்பதாவது..
எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு எப்போதும் எங்கள் முதன்மை முன்னுரிமையாகும்.
எனவே, இதுபோன்ற நிகழ்வுகள் அரிதாக இருக்கும்போது, எங்கள் விமானக் குழுவினர் பயிற்சியளிக்கப்பட்டு, நிலைமையை பாதுகாப்பாக நிர்வகிக்கத் தயாராக உள்ளனர்.
என்ன நடந்தது என்பதை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், மேலும் தகவல் கிடைக்கும்போது அதைப் பகிர்ந்து கொள்வோம்.” எனத் தெரிவித்துள்ளனர்.