வைரலாகும் அப்பா – மகள்..
அப்பா – மகள் பாசம் என்பது எப்போதும் ஸ்பெஷல் தான். மகளாக மட்டும் இல்லாமல் ஒரு தாயாக பெண் குழந்தைகள் காட்டும் பாசத்திற்கு அப்பாக்களும்,
வெறும் அப்பாவாக மட்டும் இல்லாமல் தனக்கான முதல் தோழனாக அப்பாக்கள் கொடுக்கும் பாசமிகு ஊக்கத்திற்கு மகள்களும் எப்போதும் அடிமை தான்.
இயற்கையில் ஒரு மகளுக்கு அவள் தந்தை தான் முதலில் அறிமுகம் ஆகும் ஆண்.
அதன் பிறகு தான் அண்ணன், தம்பி, கணவன், காதலன், நண்பன், உடன்பணி புரிவோர் எல்லாம்.
வாழ்நாள் முழுவதும் தங்களுடைய பாசப்பிணைப்பு தொடர வேண்டும் என்பதால் நல்ல பாசமான தந்தையாக இருக்க ஒவ்வொரு தந்தையும் கடமைபட்டுள்ளனர்.
பிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தை தான். பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் பரிசு இது.
அந்த உறவே ரொம்ப அழகானது. அப்படியான அப்பா – மகள் பாசப்பிணைப்பை சுமந்த ஒரு வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு வருகிறது.
இதையும் படிங்க : TN Electricity Board : லாபத்தில் இயக்கச் செய்ய நடவடிக்கை எடுத்திடுக – அன்புமணி!
இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டம், வல்வெட்டித்துறை பகுதியில் சமரபாகு நியூட்டன் விளையாட்டு கழகத்தால் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியின் நடுவில் எடுக்கப்பட்ட வீடியோ தான் இது.
மாரத்தான் போட்டியில் ஓடும் தனது மகள் சோர்வடையாமல் இருக்க தண்ணீர் உள்ளிட்ட ஊட்ட பொருட்களோடு சேர்த்து பாசம் கலந்த ஊக்கத்தையும் கொடுக்கும் இந்த அப்பாவும், தனக்கு மிகவும் கடினமாக இருந்தாலும்,
அப்பா கொடுத்த ஊக்கத்தால் வெற்றிகரமாக மாரத்தான் போட்டியை நிறைவு செய்த இந்த மகளும் அங்கிருந்த மக்களின் நெஞ்சங்களில் மட்டுமல்லாமல் இந்த வீடியோ மூலமாக உலக மக்களின் நெஞ்சங்களிலும் இடம் பிடித்துள்ளனர்.
இதையும் படிங்க : வைரலாகும் அப்பா – மகள் வீடியோ!
பார்க்கும்போதே புன்சிரிப்பையும் ஆனந்த கண்ணீரையும் வர வைக்கும் இந்த வீடியோ கொண்டுள்ள உணர்வு பெண் பிள்ளைகளை பெற்ற அப்பாக்களுக்கும், பாசமிகு அப்பாக்களை கொண்ட மகள்களுக்கும் மட்டுமே முழுதாய் புரியும்.