திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநர் ( dindigul collector office ) அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் 1.57 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் 6 மணி நேரம் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத பணம் 1,57,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
Also Read : மிசோரமில் கல் குவாரி விபத்தில் 14 பேர் பலி..!!
இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் உள்ளாட்சி நிதி தணிக்கை பிரிவு ஆய்வாளர்கள் 7 பேர், ஊராட்சி அலுவலர்கள் 8 பேர் என மொத்தம் 15 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து இந்த 15 பேர் மீதும் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ( dindigul collector office ) சோதனையில் கணக்கில் வராத ரொக்க பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.