அண்மையில் பிரதமர் மோடியால் கோலாகலமாக பிரதிஷ்டை செய்யப்பட்ட அயோத்தி ராமர் கோவில் தினமும் நண்பகல் (1 Hour Rest) ஒரு மணி நேரம் அடைக்கப்படும் என, அக்கோவிலின் தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் மிக பிரமாண்ட கட்டமைக்கப்பட்ட ராமர் கோவிலில் கடந்த மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
பிரதமர் மோடி அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட அந்த கும்பாபிஷேகம் நிகழ்வில் ஏராளமான அரசியல் தலைவர்கள்
திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர் . சச்சின் ஜடேஜா உள்ளிட்ட விளையாட்டு வீரர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர் .
இந்த நிலையில் இக்கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த கோவில் வளாகத்தில் மத்திய படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டு உள்ளனர்.
உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் தரிசனம் மேற்கொள்ள ராமர் கோவிலுக்கு பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர் .
பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் வைத்து, தரிசன நேரத்தை
காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, கோவில் நிர்வாகம் சமீபத்தில் அதிகரித்தது.
மேலும் இந்த கோவிலில் உயர் கோபுரங்கள் அமைத்து பல சி.சி,டிவி கேமராக்கள் வைத்து தீவிரமாக கண்காணிக்க பட்டு வருகிறது
இதற்கிடையே, அயோத்தி ராமர் கோவில் தினமும் நண்பகல் 12:30 மணி முதல் 01:30 மணி வரை, ஒரு மணி நேரம் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாரத பிரதமரால் கோலாகலமாக பிரதிஷ்டை செய்யப்பட்ட அயோத்தி ராமர் கோவில்
தினமும் நண்பகல் ஒரு மணி நேரம் அடைக்கப்படும் என அதிகாரப்பூர்வ தகவலை அக்கோவிலின் தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.
Also Read : https://itamiltv.com/dangal-actress-cause-of-death-revealed/
ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் மேலும் கூறியதாவது :
ராம் லல்லா ஒரு 5 வயது குழந்தை. காலை 4 மணிக்கு தூக்கத்தில் இருந்து எழும் அவரால் நீண்ட நேரம் விழித்துக்கொண்டு இருக்க முடியாது.
இதன்காரணமாக ராமர் கோயில் கதவை மதியம் (1 Hour Rest) 12:30 – 1:30 வரை மூட உள்ளோம் . அப்போதுதான் அவரால் ஓய்வெடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.