தமிழ் சினிமாவில் நாளை ஒரேநாளில் 10 திரைப்படங்கள் வெளியாக உள்ளது சினிமா ரசிகர்களுக்கு குஷியை எற்படுத்தி உள்ளது.
மற்ற மொழி படங்களை தாண்டி தமிழ் மொழி படங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கிறது. அதற்கேற்றாற்போல் திரைத்துறையில் பல திறமையான கலைஞர்களும் படையெடுத்து வருகின்றனர் . இதன்காரணமாகவே தமிழ் சினிமாவில் மதத்திற்கு 10 படங்கள் என வந்தவண்ணம் உள்ளது.
அந்தவகையில் நாளை ஒரே நாளில் 10 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. ஸ்வீட் ஹார்ட், பெருசு, ராபர், வருணன், மாடன் கொடை விழா, கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல், குற்றம் குறை, டெக்ஸ்டர் ஆகிய படங்கள் வெளியாகின்றன. ரஜினி முருகன், எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி ஆகிய படங்களும் நாளை ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் நாளை ஒரே நாளில் 2 ரீ-ரிலீஸ் படங்கள் உட்பட 10 படங்கள் வெளியாக உள்ளதால் சினிமா ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதந்து வருகின்றனர்.