மலேசியாவின் நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் விழுந்து நொறுங்கம் ( Malaysia ) பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைராகி வருகிறது.
90ஆம் ஆண்டு மலேசிய கடற்படை தினம் இன்னும் சில தினங்களில் அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அதற்கான பல்வேறு நிகழ்ச்சிகள் மலேசிய அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மலேசிய கடற்படை தினத்தின் 90ம் ஆண்டு நிகழ்ச்சிக்காக ஒத்திகை இன்று காலை 9.30 மணியளவில் மலேசியா நாட்டின் பேராக் அருகே லுமுட் எனும் பகுதியில் ஒத்திகை நடந்தது.
இதில் HOM (M503-3) மற்றும் Fennec (M502-6) ஆகிய இரண்டு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.
HOM (M503-3) ஹெலிகாப்டரில் ஏழு பேரும், மற்றொரு ஹெலிகாப்டரில் 3 பேரும் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
பேராக் பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் நடந்த இந்த ஒத்திகையின்போது இந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக் கொணடன . இதில் ஒரு ஹெலிகாப்டர் மற்றொரு ஹெலிகாப்டரின் வால் பகுதியில் மோதியதால் இரண்டு ஹெலிகாப்டர்களும் தரையில் விழுந்து நொறுங்கின, மேலும் ஹெலிகாப்டர்களின் துண்டுகள் காற்றில் மிதந்தன.
இதில் பயணம் செய்த 10 பெரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அரசு தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உதவியால் உயிரிழந்தவர்களின் உடல்களை ஹெலிகாப்டர்களிலிருந்து மீட்கப்பட்டு ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மலேசிய நாட்டிற்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.மேலும் மலேசிய அரசக் கடற்படையும், தற்காப்பு அமைச்சகமும் ( Malaysia ) இந்த விபத்து குறித்து உடனடியாக விசாரணை நடத்த பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.