புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஜனவரி 31 வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பரவிய கொரானா தொற்று பெரிதும் பாதிப்புக்களை ஏற்படுத்திய நிலையில், சமீப காலமாக சற்று குறைவடைந்திருந்தது. இந்த நிலையில் கொரோனா பரவல் கடந்த ஒரு மாதமாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. மேலும் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட உருமாரிய வைரஸான ஒமைக்ரானும் அதிதீவிரமாக பரவி வருகிறது.
கொரோனா பாதிப்புகள் இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தத் தொடங்கி உள்ளது. அதன் படி புதுச்சேரி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் தவிர அனைத்து பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கபட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கி இருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரியில் தினசரி கொரோனா தொற்று 2,000தை தாண்டிய நிலையில் ஜனவரி 31 வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
1-9ஆம் வகுப்புகள் ஏற்கனவே மூடப்பட்ட நிலையில் 10,11,12ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் 19 அன்று தொடங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன என்றும் தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.