10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் விருப்ப பாடங்களை (10th Public Exam) எழுதக்கூடிய மாணவர்களுக்கு இனி 6 பாடத் தேர்வுகள் 600 மதிப்பெண் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது .
இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ளாள் அரசாணையில் கூறிருப்பதாவது :
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முறையில் மாற்றம் :
2024-25 கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முறையில் 5 பாடங்களைத் தாண்டி விருப்ப பாடத்தை தேர்வு செய்யும் மாணவர்கள் அதில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது .
விருப்ப பாடத்தை தேர்வு செய்துள்ள மாணவர்கள், இனி 6 பாடத் தேர்வுகளையும் எழுத வேண்டும்.
சிறுபான்மையினர் பள்ளிகளில் பயிலும் சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் விருப்ப பாடத்தை பயிலுகின்றனர்; வழக்கமாக தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 5 பாடங்களை எழுதும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வில் எந்த மாற்றமும் இல்லை.
உருது, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட விருப்பப்பாடங்களில் பெறும் மதிப்பெண் சான்றிதழில் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் விருப்ப பாடத்திலும் 35 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டு
தமிழ் கற்றல் சட்டத்தில் திருத்தங்கள் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இனி விருப்ப பாடத்திற்கான மதிப்பெண் இனி தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும்
அடுத்த கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது
விருப்ப பாடங்களை எழுதக்கூடிய மாணவர்களுக்கு இனி 6 பாடத் தேர்வுகள் 600 மதிப்பெண் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளது மாணவர்கள் மத்தியில் எந்தமாதிரியான எண்ணத்தை எற்படுத்தும் என தெரியவில்லை.
நடப்பு ஆண்டு வரை 4ஆவதாக இடம் பெறக்கூடிய விருப்ப பாடத்திற்கு எவ்வளவு மதிப்பெண் பெற்றாலும் அதை கணக்கில் கொள்வது இல்லை.
Also Read : https://itamiltv.com/will-pm-modi-resign-minister-criticize/
இதுகுறித்த வழக்கில் உச்சநீதிமன்ற வழங்கிய தீர்ப்பை அடுத்து தேர்வு முறையில் மாற்றம் செய்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த தேர்வு முறை குறித்து ஆசிரியர்கள் மாணவர்களிடம் (10th Public Exam) எடுத்துக்கூறி பொது தேர்வில்
நல்ல மதிப்பெண் எடுக்க அறிவுறுத்தவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.