117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து – ஆன்லைன் தேர்வில் முறைகேடு!

117-distance-education-students-results-cancelled
117 distance education students results cancelled

தொலை தூரக் கல்வி படிப்பின் எந்த பட்டப்படிப்பிலும் சேராமலேயே ஆன்லைன் முறையில் தேர்வெழுதிய 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நாடு முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு, தேர்வுகளும் நடத்தபட்டு வருகின்றன.

அந்த வகையில் சென்னை பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளிலும் இரண்டு ஆண்டுகளாக ஆன்லைன் வழியாகவே வகுப்புகளும், செமஸ்டர் தேர்வுகளும் நடைபெற்று வந்துள்ளது.

இந்த நிலையில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வில், தொலைதூரக் கல்வி மூலம் பயின்று 20 ஆண்டுகளுக்கும் மேல் அரியர் வைத்துள்ள மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத சென்னை பல்கலைக் கழகம் வாய்பு அளித்தது.

அதனை பயன்படுத்தி 2020 டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆன்லைன் தேர்வில், தொலைதூரக் கல்வியில் பயிலும் மாணவர்கள் என்று குறிப்பிட்டு முறைகேடாக தேர்வு எழுதி பட்டம் பெற முயன்ற 117 பேர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

117-distance-education-students-results-cancelled
117 distance education students results cancelled

இதனைத் தொடர்ந்து தொலைதூரக் கல்வி படிப்பின் எந்த பட்டப்படிப்பிலும் சேராமலேயே ஆன்லைன் முறையில் தேர்வெழுதிய 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் இது குறித்து ஆராய விசாரணைக் குழுவை அமைத்து சென்னைப் பல்கலைகழ துணைவேந்தர் கௌரி உத்தரவிட்டுள்ளார்.

Total
0
Shares
Related Posts