தேர்தல் களத்தில் மக்களின் ஆதரவை நம்பியே தமது கட்சிஇருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் களமானது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.இந்த நிலையில் ,ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ், திமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன.
இந்நிலையில்,கடந்த சில தினங்களுக்கு முன் புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் (seeman) செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்,
நாளுக்கு நாள் நாம் தமிழர் கட்சியை வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது என்றும், மேலும், இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட இருக்கிறது என தெரிவித்து இருந்தார்.
மேலும், ஈரோடு கிழக்கு தொகுதியில் 30% ஆதி குடிமக்கள் சிறுபான்மையினர் இருக்கின்றனர் எனவும், நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றிபெறும் என தெரிவித்து இருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அரவிந்த் கெஜ்ரிவால் முடிகிறது என்றால் சீமானால் முடியாதா என்ன? 2014 மக்களவைத் தேர்தலில் என்னோட ஆட்டத்தை பாருங்க… என்று தெரிவித்து இருந்தார்.
சீமான் பேச்சு :
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலையொட்டி, சூரம்பட்டி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பணிமனை அலுவலகத்தை அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்துவைத்தார்.
மேலும் இடைத்தேர்தலில் தங்களது கட்சி சார்பில் மாவட்ட மகளிர் பாசறை துணைச் செயலாளராக உள்ள மேனகா போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.
இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு கருத்தையும் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு கருத்தையும் தெரிவிப்பதாக விமர்சித்தார். தமிழினத்தை முன்னெடுத்து தேர்தலில் போட்டியிடுவதாகவும் சீமான் தெரிவித்தார். மாற்றத்துக்கான விதையை ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் விதைப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் 12 நாட்களுக்கு மேல் தங்கி பரப்புரை மேற்கொள்ள உள்ளதாகவும் தெருத் தெருவாக சுற்றி மக்களை சந்திப்பதுதான் எங்கள் தேர்தல் அணுகுமுறையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.