ஒடிசாவில் (odisha) 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில், 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் (odisha) திகபகண்டி பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் நேற்று தனி பேருந்து மூலம் பெர்காம்பூர் நகரில் நடைபெற இருந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்தனர்.
இதற்காக, நேற்று மாலை பேருந்தில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை திகபகண்டி-பெர்காம் பூர் சாலையில் அவர்கள் பயணித்த பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரே வந்த பயணிகள் பேருந்தும், இவர்களின் பேருந்தும் கண் இமைக்கும் நேரத்துக்குள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் திருமண கோஷ்டியினர் இருந்த பேருந்து கடுமையாக நொறுங்கியது.
விபத்துக்குள்ளான இரண்டு பேருந்துகளிலும் 100-க்கும் மேற்பட்டவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இதையடுத்து, தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இடிபாடுகளை அகற்றி பேருந்திற்குள் சிக்கி இருந்தவர்களை காவல் துறையினரும், தீயணைப்பு படையினரும் மீட்டனர். ஆனால், இந்த கோர விபத்தில் சிக்கி 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மீட்கப்பட்ட அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.