கர்நாடகாவில், விடுதி உணவைச் சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் (hospitalised) அனுமதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்நாடகா மாநிலம், மங்களூருவின் சக்திநகர் பகுதியில் தனியார் நர்சிங் மற்றும் பாராமெடிக்கல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த கல்லூரியில் படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
முன்னதாக, மாணவர்கள் அனைவரும் வழக்கம் போல தங்கள் விடுதி உணவகத்தில் உணவு சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில், உணவகத்தில் உணவு உண்ட மாணவர்களுக்குப் “புட் பாய்சன்” ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதனால், 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் (hospitalised) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, அவர்களில் சிலரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், ஒரே நேரத்தில் இத்தனை மாணவர்களுக்கு “புட் பாய்சன்” ஆக என்ன காரணம் என்பதைக் கண்டறிய முயன்று வருவதாக மங்களூரு போலீஸ் கமிஷனர் என் சஷி குமார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விடுதி உணவைச் சாப்பிட்ட 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.