ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து தொடர்ந்து 5 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் நிலநடுக்கத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்கு ஆப்கானிஸ்தானில் இன்று மதிய நேரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஹெராட்டின் வடமேற்கே 40 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், அதைத் தொடர்ந்து 5.5, 4.7, 6.3, 5.9 மற்றும் 4.6 ரிக்டர் அளவுகளில் ஐந்து முறை நில அதிர்வு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளது.
நள்ளிரவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 40 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு அப்கானிஸ்தானில் தென்கிழக்கு பகுதியில் இதேபோன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட அந்த நிலநடுக்கம் குறித்த அதிர்வலைகள் நீங்காத நிலையில், தற்போது மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தற்போது 5 முறை ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.