தமிழ்நாட்டின் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில்கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையை பொறுத்தவரையில் மழை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் இன்றைய மழை நிலவரங்களை குறித்து வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” எனக் கூறப்பட்டுள்ளது.
நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், தேனி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை மற்றும் நாளை மறு நாள் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, திருப்பூர், வேலூர், சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், மதுரை, தேனி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.