ராபர்ட் மற்றும் பெட்டி ஃபூக்ஸ் தெற்கு இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். இங்கிலாந்தைச் ( historical Gold coins ) சேர்ந்த இந்தத் தம்பதியினர் 2019 ஆம் ஆண்டில் சவுத் போர்டன் பண்ணை வீட்டை வாங்கி உள்ளனர்.
சவுத் போர்டன் பண்ணை வீடு, மேற்கு டோர்செட்டில் உள்ள ஒரு சிறிய குக்கிராமத்தில் அமைந்துள்ள 17 ஆம் நூற்றாண்டு பழமையான ஒரு வீடாகும்.
வாங்கியதில் இருந்து ஏதும் செய்யாத நிலையில் சில நாட்களுக்கு முன்பு இவர்கள் தாங்கள் வாங்கிய பண்ணை வீட்டைப் புதுப்பிக்க முடிவு செய்தனர்.
முதலில் அவர்கள் சமையலறையைப் புதுப்பிக்க முடிவு செய்தனர். சமையலறையில் இருந்த பழைய தரையை அகற்றி கீழ்த் தளத்தை விரிவுபடுத்துவதற்காக இரண்டு அடி கீழே தோண்டினர்.
ராபர்ட் ஒரு குச்சியால் தரையைத் தோண்டிக்கொண்டிருந்தபோது ஏதோ ஒன்று இருப்பதாகப் பெட்டி ஃபூக்ஸ் கூறியிருக்கிறார். மேலும் தோண்டும் போது அவருக்கு வரலாற்று மதிப்புமிக்க நாணயங்கள் கிடைத்தன. அவர் அனைத்து நாணயங்களையும் ஒரு வாளியில் சேகரித்து வைத்திருக்கிறார்..
பின்னர் இதைப் பற்றிய தகவலை என்ஹெச்எஸ் சுகாதார பார்வையாளரான பெட்டி ஃபூக்ஸ், உடனடியாக உள்ளூர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார்.
உடனடியாக அங்கு வந்த அதிகாரிகள், அந்த நாணயங்களைப் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திற்கு அடையாளம் காண்பதற்கும் சுத்தம் செய்வதற்கும் அனுப்பி வைத்தனர்.
கண்டுபிடிபட்ட சுமார் 1, 000 நாணயங்களும் அடையாளம் காணப்பட்டன. முதலாம் எலிசபெத் வெள்ளி ஷில்லிங்ஸ், முதலாம் சார்லஸ் தங்க யுனைட் நாணயங்கள், முதலாம் ஜேம்ஸ் வெள்ளி ஆறு பென்ஸ் நாணயங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய சேகரிப்பு என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த நாணயங்களின் மதிப்பு சுமார் 65,000 டாலர் அதாவது நமது ( historical Gold coins ) இந்திய ரூபாயில் சுமார் 62 லட்சம் என கூறப்படுகிறது.