இன்று (01.06.23) வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் (gas Cylinder) விலை குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தான் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் (gas Cylinder) விலை ஆகியவை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.
முன்னதாக, சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்ட நிலையில், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ஆகியவை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
கடந்த மாதம் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.2.021.50க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த மாதம் வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டரின் விலை அதிரடியாக குறைந்து உள்ளது.
அதன்படி, இன்று (01.06.23) நிலவரப்படி வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.84.50 விலை குறைந்து ரூ.1,937 ஆக சிலிண்டர் விற்பனை செய்யப்படுவதனால் வணிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.