திருச்சியில் கொலை வழக்கில் முன் விரோதம் காரணமாக வெங்காய வெடியை வீட்டின் வாசலில் வீசி சென்ற 3நபர்கள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்க்கொண்டும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவல் துணை ஆணையர்கள், சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் அறிவுரை வழங்கியுள்ளார்.
கடந்த 5ந்தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதி நகரில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் வாசலில் நாட்டு வெடிகுண்டை வீசியதில் சத்தம் கேட்டதில் அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவிட்டதாகவும் நடவடிக்கை வேண்டி கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் சம்பவ இடத்தில் காவல் அதிகாரிகள் விசாரணை செய்தும், சம்பவ இடத்தில் தடய அறிவியல் உதவி இயக்குநர் நேரில் பார்வையிட்டும் மாதிரிகளை சேகரித்தும், விசாரணை மேற்க்கொண்டதில் வீட்டின் வாசலில் இரண்டு பெரிய நாட்டு வெடி (வெங்காய வெடி) வீசி சென்றுள்ளார்கள் எனவும், மேற்கண்ட சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கம் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், புகார்தாரர் அடையாளம் தெரிவித்த நபர்களை பற்றி புலன்விசாரணை மேற்க்கொள்ளப்பட்டது.
விசாரணையில், வரதராஜன்( 23),முகேஷ்(23), சடையன் (எ )அய்யப்பன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக வீட்டின் வாசலில் நாட்டு வெடி வீசிவிட்டு தப்பிச்சென்று, தலைமறைவாக இருந்தது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்தவர்களை காவல்துறையினர் பிடிக்க முயன்றபோது, வரதராஜன், முகேஷ் ஆகியோர்கள் தப்பிக்க முயன்று கம்பவுண்ட் சுவர் ஏறிக்குதித்தில் எதிரிகள் வரதராஜன், முகேஷ் இருவருக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின், அவர்களிடம் விசாரணை செய்யப்பட்டதில் 3நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில் மேற்படி மூன்று நபர்களையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும் விசாரணையில் வரதராஜ் என்பவர் மீது அடிதடி, வழிப்பறி, போக்சோ என 5வழக்குகள், முகேஷ் என்பவர் மீது அடிதடி வழக்கு, வழிப்பறி என 3வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.தொடர்ந்து காவல்துறையினருடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.