2 People died Went to Vote : சேலத்தில் வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் முதற்கட்டமாக நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 19-04-24 காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க : அண்ணாமலைக்கு தான் வெற்றி..கைவிரலை துண்டித்த பா.ஜ.க பிரமுகர்!!
வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் வாக்களிக்க சென்ற இரண்டு பேர் வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவர்களில், கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற 77 வயதாகும் சின்னபொண்ணு என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
மேலும், சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த 65 வயதாகும் பழனிசாமி என்ற நபர் தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்ற போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தின் போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் இருவரின் உடலையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் 2 People died Went to Vote.
வாக்களிக்கச் சென்ற இரண்டு பேர் வாக்குச்சாவடியில் மயங்கி விழுந்து உயிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.