கிருஷ்ணகிரி பர்கூரில் 2000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் தருவதாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2016 ஆம் ஆண்டு 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை, தொடர்ந்து 2,000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து 2,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என கடந்த ஆண்டு அறிவித்த ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக்கொள்ள அறிவுறுத்தியது.
தற்போது 2,000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இல்லாத நிலையில், 2000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் தருவதாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் நகருக்கு செல்லும் வழியில் பல இடங்களில் சுவரொட்டியொன்று ஒட்டப்பட்டிருந்தது.
அதில் 2,000 ரூபாய் நோட்டுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என குறிப்பிட்டு, செல்போன் நம்பர் ஒன்றும் இருந்தது.
அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் இதை புகைப்படம் எடுத்த நிலையில் அவை வைரலாகி வருகிறது. சிலர் அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
அப்போது எதிர்முனையில் பேசிய நபர், 2,000 ரூபாய் நோட்டுகள் தந்தால் 3 ஐநூறு ரூபாய் நோட்டுகள் தருவேன் என்றும், மாற்றி கொடுப்பதற்கு 500 ரூபாய் கமிஷன் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து அறிந்த போலீசார், சம்பந்தப்பட்ட நபரிடம் போனில் பேசி விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது “அந்த நபர் கிருஷ்ணகிரி மாவட்டம் பெலவர்த்தி ஊராட்சி வள்ளுவர் புரத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
இதையும் படிங்க : kilambakkam bus stand : நோக்கமே வீணாகிவிடும் -அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
மேலும் கூறிய அந்த நபர் பொங்கல் பண்டிகையின் போது அவரது வீட்டை சுத்தம் செய்த போது நான்கு 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைத்ததாகவும், அதை சென்னைக்கு சென்று ரிசர்வ் வங்கியில் மாற்றியதாகவும்,
இதனால் ரூ.500 கமிஷன் பெற்று இதை போல நோட்டுக்களை மாற்றலாம் என்ற எண்ணத்தில்தான் சுவரொட்டி ஒட்டியதாக எனக்கூறியுள்ளார்.
https://x.com/ITamilTVNews/status/1755550770219602124?s=20
அது மட்டும் இல்லாமல் “உங்களிடம் ஏதேனும் 2,000 ரூபாய் நோட்டு உள்ளதா? கொடுங்க மாற்றித் தருகிறேன்” என போலீசாரிடமே கேட்டுள்ளார்.
இது தொடர்பாக கூறிய வங்கி அதிகாரிகள் “இது சட்டப்படி தவறு. காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.