மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசி பலன் (2024 February 10)
மேஷம் :
இன்று புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். பணிச்சுமை அதிகரிப்பதால் சற்று சோர்வு உண்டாகும்.
முருகப்பெருமான் வழிபாடு நன்மை தரும்.
ரிஷபம் :
எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கக்கூடும். சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தை சாதகமாகும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க கூடுதல் உழைப்பு போட வேண்டியிருக்கும்.
முருகப்பெருமான் வழிபாடு நன்மை தரும்.
இதையும் படிங்க : பிப்ரவரி 10 : தங்கத்தின் விலை ரூ.80 குறைந்தது!
மிதுனம் :
உடல்நலனில் கவனம் தேவை. இன்று முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய நட்பு கிடைப்பது மகிழ்ச்சி தரும்.
வீரபத்திரரை வழிபட வெற்றி கிடைக்கும்.
கடகம் :
தெய்வ அனுகூலம் நிறைந்த நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். நண்பர்களிடம் எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.
அம்பிகையை வழிபடுவது நன்மை தரும்.
சிம்மம் :
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்த படி இருக்கும்.
சிவபெருமானை வழிபட சிரமங்கள் குறையும்.
கன்னி :
சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். இன்று குடும்பம் தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த தகவல் கிடைக்கும்.
பைரவரை வழிபடுவது நன்மை தரும்.
துலாம் :
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் மறையும். திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். வாழ்க்கை த்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.
விருச்சிகம் :
அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைக்கும். கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.
மகாவிஷ்ணு வழிபாடு மகிழ்ச்சி தரும்.
தனுசு :
இன்று தெய்வ பக்தி அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் மூலமாக எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.
அம்பிகை வழிபாடு நன்மை சேர்க்கும்.
மகரம் :
எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.
கும்பம் :
சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும்.
குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.
இதையும் படிங்க :இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் பிப்.14 முதல் மார்ச் 15 வரை http://trb.tn.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்!
மீனம் :
உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவி இடையே மனக்கசப்பு ஏற்படும். புதிய முயற்சிகளில் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் சகவியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.
மகாவிஷ்ணு வழிபாடு நன்மை தரும் (2024 February 10).