மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ராசி பலன் (2024 February 27)
மேஷம் :
இன்று வாழ்க்கைத் துணை வழியில் மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்புண்டு. வெளியூர் பயணக்க செல்ல வேண்டியிருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
அம்பிகை வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 9
நிறம் : நீலம்.
ரிஷபம் :
இன்று புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அரசாங்க வகையில் இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும்.
முருகப் பெருமான் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 1
நிறம் : மஞ்சள்
மிதுனம் :
நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த விஷயம் வெற்றிகரமாக நிறைவேறும். கணவன் மனைவி அந்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி வந்து சேரும்.
விநாயகர் வழிபாடு சங்கடங்கள் தீர்க்கும்.
அதிர்ஷ்ட எண் : 8
நிறம் : மஞ்சள்
கடகம் :
இன்று தெளிவாக சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நம்பும் பலரது உண்மை முகத்திரை வெளிவரும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 7
நிறம் : கறுப்பு
Increase Temperature : வெப்பநிலை இயல்பைவிட மேலும் அதிகரிக்க வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை!
சிம்மம் :
இன்று துணிவுடன் செயல்படும் நாள். உடல் நலம் சீராகும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்த படி இருக்கும்.
சிவபெருமான் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 4
நிறம் : வெள்ளை
கன்னி :
நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனை உங்களுக்கு சாதகமாக நிறைவேறும். தடைகள் விலகும். வாழ்க்கைத்துணை வழியில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும்.
வெங்கடேச பெருமாள் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 8
நிறம் : சிவப்பு
துலாம் :
புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
விநாயகர் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 2
நிறம் : ஊதா
விருச்சிகம் :
மிகவும் உற்சாகமான நாள். தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு கிடைக்கும். உறவினர்கள் வருகை நன்மை தரும். எதிரிகளால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் மறையும்.
காமாட்சி அம்மன் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 5
நிறம் : இளம்பச்சை
தனுசு :
இன்று தொடங்கும் புதிய முயற்சிகள் நன்மை பயக்கும். தங்கம், சொத்து வாங்கும் சூழல் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போல இருக்கும். பெற்றோர் வழியில் உதவிகள் கிடைக்கும்.
துர்க்கை வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 4
நிறம் : இளஞ்சிவப்பு
மகரம் :
வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.
மஹா விஷ்ணு வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 3
நிறம் : ஆரஞ்சு
கும்பம் :
பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் சிலருக்குக் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
சரபேஸ்வரர் வழிபாடு நன்மை தரும்.
அதிர்ஷ்ட எண் : 6
நிறம் : சாம்பல் நிறம்
மீனம் :
எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீண் விவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் பிரச்னைகள் எதுவும் இல்லை.
அம்பிகை வழிபாடு அனுகூலமான பலன்களைத் தரும் (2024 February 27).
அதிர்ஷ்ட எண் : 9
நிறம் : கருப்பு