சென்னையில் மிகவும் பிஸியான ஏரியாவில் ஒன்றானா தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் (silver stolen) 222 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் சிறுகச் சிறுக 222 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டது அம்பலமாகி உள்ளது .
அந்த பிரபல நகைக்கடையில் நீண்ட நெடு நாட்களாக பணியாற்றிக் கொண்டே சுமார் ரூ.1.80 கோடி மதிப்பிலான 222 கிலோ வெள்ளிக் கட்டிகளை திருடப்பட்டுள்ளதை அறிந்த கடையின் உரிமையாளர் அதிர்ந்துபோய் உள்ளார் .
இதையடுத்து இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் கொடுத்த கடையின் உரிமையாளர் தனது வெள்ளிக்கட்டிகளை மீட்டுத்தரும்படி கோரிக்கை வைத்துள்ளார்.
இந்நிலையில் நகைக்கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் நகைக்கடை ஊழியர்கள் சரவணன், அஜ்மல், மகேந்திரன், வினோத், பிரகாஷ், மதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களை தனிப்படை அமைத்து தேடும் பணி தொடஙக்கப்பட்டுள்ளது .
வேலைக்கு இருக்கும் இடத்தில் விசுவாசமாய் இருக்கவேண்டிய ஊழியர்களே கொள்ளையில் (silver stolen) ஈடுபட்டு கைவரிசை காட்டியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.