23 லட்சம் EPF மோசடி வழக்கில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கிரிக்கெட் அணியில் நட்சத்திர கிரிக்கெட் வீரராக வலம் வந்தவர் ராபின் உத்தப்பா . இதையடுத்து சர்வேதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற உத்தப்பா . IPL போன்ற தொடர்களில் விளையாடி வந்தார்.
இதையடுத்து அந்த தொடரிலும் ஓய்வை அறிவித்த உத்தப்பா தற்போது தனது தனிப்பட்ட வேளைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அந்தவகையில் உத்தப்பா இயக்குநராக உள்ள Centaurus Lifestlye Brands நிறுவனம், அதன் ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்த PF பங்கு ₹23 லட்சத்தை முறையாக வைப்பு வைக்கவில்லை கூறப்பட்ட நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) மோசடி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து பெங்களூரு PF ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து உத்தப்பா எந்தநேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றும் செலுத்த வேண்டிய பணத்தை உடனே செலுத்த வேண்டும் எனவும் பெங்களூரு PF ஆணையம் தெரிவித்துள்ளது.