ஆட்டோவில் 27 பேரை ஏற்றி சவாரி செய்த ஆட்டோ ஓட்டுநரை மடக்கிப் பிடித்த போலீசார், ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பதேப்பூரில் உள்ள பிந்த்கி கோட்வாலி என்ற பகுதியில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தனது ஆட்டோவில் 27 பயணிகளை சவாரி ஏற்றி சென்றுள்ளார். ஆட்டோ விதிகளை மீறி அதி வேகமாக சாலையில் சென்ற ஆட்டோவை, கவனித்த உள்ளூர் காவல்துறை, அந்த வாகனத்தை துரத்திச் சென்று தடுத்து நிறுத்தியது.
ஆட்டோவை எதற்காக இவ்வளவு வேகமாக ஓட்டி செல்கிறீர்கள், சவாரியை கீழே இறங்க சொல்லுங்கள் என காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநரிடம் கூறியுள்ளனர். இதனை அடுத்து அந்த ஆட்டோவில் இருந்து பயணிகள் ஒவ்வொருவராக கீழே இறங்கினர்.
அப்போது அதிகபட்சமாக 6 பேர் மட்டுமே பயணம் செய்யக் கூடிய ஆட்டோவில் 27 பேரை ஏற்றி ஆட்டோ ஓட்டுனர் சவாரி செய்துள்ளதை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த ஆட்டோவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 27 பேர் சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் ஆட்டோவை பறிமுதல் செய்து, அபராதம் விதித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை சாலையில் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் போனில் படம் பிடித்து சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதைத் தொடர்ந்து இந்த வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
जनसंख्या विस्फोट का दुष्परिणाम
ऑटो एक और सवारी सत्ताईस👇 pic.twitter.com/ex7QCiRJTp
— Ashwini Upadhyay (@AshwiniUpadhyay) July 11, 2022