32 பள்ளிகளின் கட்டடங்கள் இடிக்கப்படுமா? -மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

281-school-buildings-under-the-control-of-Chennai-Corporation
281-school-buildings-under-the-control-of-Chennai-Corporation

சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 281 பள்ளிகளில் 32 பள்ளிகளின் கட்டிடத்தை கண்டிப்பாக இடிக்க வேண்டும் என அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாநகரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் உள்ள கழிவறைத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மேலும் நான்கு மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து இம்மாத இறுதியில் அறிக்கை அளிக்கும்படி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளிலும் குழு அமைத்து ஆய்வு செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இந்த 281 பள்ளிகளின் சுற்று சுவர், கழிப்பறை, வகுப்பறைகள் ஆகியவற்றின் தரத்தை ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி கல்வி அதிகாரி பாரதிதாசன், உதவி செயற்பொறியாளர் உள்ளிட்டோடோர் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுக்கள் கடந்த திங்கள் கிழமை முதல் மூன்று நாட்களாக ஆய்வு செய்தனர். இதையடுத்து இந்த குழுக்கள் ஆய்வு செய்து அறிக்கையை கட்டிடங்கள் துறையிடம் சமர்பித்துள்ளனர்.

281-school-buildings-under-the-control-of-Chennai-Corporation
281 school buildings under the control of Chennai Corporation

இதையடுத்து கட்டிட துறை அதிகாரிகள் 72 பள்ளிகளின் கட்டிடங்களை ஆய்வு செய்து 72 பள்ளிகளின் கட்டிடங்கள் இடிக்கப்படுமா? அல்லது 32 பள்ளிகளின் கட்டிடம் இடிக்க வேண்டுமா என்று இரண்டு நாட்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய இருக்கின்றனர். அதன்பிறகு சென்னை மாநகராட்சியில் எத்தனை பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்படும் என்ற தகவல் தெரிய வரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Total
0
Shares
Related Posts