குடவாசல் அருகே உணவகத்தில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட 3 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ள சம்பவம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது உள்ள காலத்தில் மக்கள் உணவகங்களில் உணவு வாங்கி சாப்பிடுவது அதிகரித்துள்ளது. இவ்வாறு வாங்கி சாப்பிடும் உணவுகளால் பலர் பாதிக்கப்படும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக சமீபத்தில் பிரியாணி, சவர்மா, பர்கர் போன்ற உணவுகளை சாப்பிடு உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உணவுத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குடவாசலில் பிரியாணி வாங்கி சாப்பிட்ட 3 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேருந்து நிலையத்திற்கு எதிரே தனியார் உணவகம் உள்ளது. இந்த உணவகத்தில் வீரையன், முருகேசன், ராமச்சந்திரன் ஆகிய மூன்று பேர் பிரியாணி வாங்கி சாபிட்டுள்ளனர்.
அதன் பிறகு சில மணி நேரங்கள் கழித்து 3 பேருக்கும் வயிற்றுப்போக்கு, வாந்தி மயக்கம் ஏற்பட்டு சுயநினைவை இழந்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களது உறவினர்கள், அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிப்பட்டது.
பின்னர் இது தொடர்பாக உணவுத்துறை அதிகாரிக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உணவுத்துறை அதிகாரிகள் உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.