அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ( 3 shift ) கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிஃப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிஃப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை (1st Shift), மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை (2nd Shift), இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை (3rd Shift), என 3 ஷிஃப்ட்-களாக பணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்த பணியாளர்களில் 50% பேர் முதல் ஷிஃப்டிலும், 25% பேர் 2வது ஷிஃப்டிலும், 25% பேர் 3வது ( 3 shift ) ஷிஃப்டிலும் பணியமர்த்தப்படுவார்கள் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.