செங்கல்பட்டு, மதுராந்தகம் அருகே தனியார் பேருந்து படிக்கட்டில் பயணம் (Accident) செய்த 3 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது .
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுநாகலூர் என்ற இடத்தில தனியார் பேருந்தில் கல்லூரிக்கு செல்வந்தராக மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணித்து வந்துள்ளனர் அப்போது மாணவர்கள் பயணித்த பேருந்தை முந்திய கன்டெய்னர் லாரி உரசியதில் பேருந்தில் இருந்த 3 மாணவர்கள் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் .
Also Read : https://itamiltv.com/premalatha-condemned-citizenship-act-caa/
மேலும் இந்த கோர விபத்தில் சிக்கி 5க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இந்த விபத்து தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு (Accident) வந்த போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எதிர்காலத்தில் பல சாதனைகளை செய்வார்கள் என்று கனவோடு இருந்த இளைஞர்கள் 3 பேர் இந்த விபத்தில் பரிதமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.