ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி உட்பட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள வனப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
Also Read : மின் கட்டண உயர்வு – அடிப்படை நிர்வாக அறிவு இல்லாத மாடல் – அண்ணாமலை விளாசல்..!!
நெடு நீண்ட நேரம் ஏற்பட்ட இந்த துப்பாக்கி சண்டையில் 3 ராணுவ வீரர்கள், ஒரு ராணுவ அதிகாரி வீரமரணம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்முவில் இந்த ஆண்டில் நடந்த 6வது தீவிரவாத தாக்குதல் இதுவாகும். 2021ம் ஆண்டு முதல் இதுவரை தீவிரவாத தாக்குதலில் 52 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.