உத்தரப்பிரதேசத்தில் பெண் ஒருவர் தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக தனது கணவனின் முத்த மனைவிக்கு பிறந்த 4 வயது சிறுவனை மாற்றாந்தாய் ஒருவர் நரபலி கொடுத்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனின் கண், கன்னம் மற்றும் முகத்தின் பல இடங்களில் காயம் அடைந்த நிலையில் 4 வயது சிறுவன் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சோகம் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ரெஹ்சி என்ற கிராமத்தில் ஜிதேந்திரா என்ற நபர் தனது மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி உயிரிழந்ததை தொடர்ந்து ரேனு பிரஜாபதி என்ற 30 வயதுடைய பெண்ணை ஒன்றரை வருடத்திற்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், ரேனுவுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவரது குழந்தையும் கருவிலேயே உயிரிழந்ததால் அதிர்ச்சியுடன் காணப்பட்ட அவர் தனக்கு குழந்தை கிடைப்பதற்காக தயாராம் யாதவ் என்ற மாந்ரீகரை அணுகியுள்ளார். ரேனு. அந்த சாமியாரோ ஜிதேந்திராவின் மகன் சத்யேந்திராவை பலி கொடுத்தால்தான் அவருக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
இதனை கேட்ட ரேனு சிறிதும் இரக்கமின்றி 4 வயது குழந்தையான சத்யேந்திராவை கடத்தி வந்து, நரபலி கொடுத்துள்ளார். இதற்கு ரேணுவின் தாய் மற்றும் தந்தையும் உதவியாக இருந்துள்ளனர். இந்நிலையில், விளையாடச் சென்ற தனது மகன் சத்யேந்திரா வீடு திரும்பாததை கண்டு, அதிர்ச்சியடைந்த ஜிதேந்திரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில், காவல் துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் சிறுவன் சத்யேந்திரா ரெஹ்சி கிராமத்தில் உள்ள குளம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த சம்பவம் தெடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், ஜிதேந்திராவின் இரண்டாவது மனைவி ரேணு தனது தாய் மற்றும் தந்தையுடன் சேர்ந்து சிறுவனை நரபலி கொடுத்தது தெரியவந்ததை அடுத்து அவர்கள் மூவரையும் மற்றும் நரபலி கொடுக்கத் தூண்டிய மந்திரவாதியையும் சேர்த்து 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், சிறுவனை கொல்ல பயன்படுத்தப்பட்ட துண்டு, எலுமிச்சம்பழங்கள் உள்ளிட்டவை போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.