Haiti : ஹைதி நாட்டில் இருந்து அகதிகள் சிலர் கெய்கோஸ் என்ற தீவை நோக்கி படகில் சென்றுகொண்டிருந்த போது கெய்கோஸ் என்ற தீவை நோக்கி படகில் திடீரென தீப்பிடித்ததில் 40 பேர் பலியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஹைதி நாட்டில் சுகாதார வசதியின்மை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை போன்றவை காரணமாக மக்கள் ஆபத்து நிறைந்த கடல் பயணங்களில் ஈடுபடுகின்றனர்.
அந்தவகையில் ஹைதி நாட்டில் இருந்து அகதிகள் சிலர் துர்க்ஸ் மற்றும் கெய்கோஸ் என்ற தீவை நோக்கி படகில் சென்றுகொண்டிருந்த போது படகு திடீரென தீப்பிடித்தது.
இந்த தீ விபத்தில், படகில் இருந்தவர்கள் சிக்கி கொண்ட நிலையில், ஏறக்குறைய 40 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். இதனை சர்வதேச அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்து உள்ளது.
மேலும், இந்த விபத்தில் சிக்கிய 41 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து சர்வதேச அகதிகளுக்கான அமைப்பின் தலைவர் கிரிகோயர் குட்ஸ்டீன் கூறுகையில்,
ஹைதி நாட்டில் பாதுகாப்பு குறைபாடு மற்றும் புலம்பெயர்வதற்கான சட்டப்பூர்வ வழிகள் ஏதும் இல்லாதது ஆகியவை தான் மக்கள் இதுபோன்ற பாதுகாப்பற்ற பயணங்கள் மேற்கொள்ளும் போது சில சோக சம்பவங்கள் ஏற்படுவதற்கான காரணிகளாக உள்ளன என கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி ஹைதி (Haiti) நாட்டிலும் சமூக மற்றும் பொருளாதார நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.
அங்கு கடந்த சில மாதங்களாக ஏற்பட்டு வரும் தீவிர வன்முறை சம்பவங்களால், அவர்களின் நிலைமை இன்னும் மோசமடைந்து உள்ளது என்றும் கிரிகோயர் குட்ஸ்டீன் கூறியுள்ளார்.
எனவே, சுகாதார வசதியின்மை, அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை, சமீபத்திய வன்முறை போன்றவற்றால் இதுபோன்ற ஆபத்து நிறைந்த பயணங்களில் ஈடுபட வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள்.