தமிழ்நாடு குடிமகன்கள் ஆனந்தமாக மதுவை பருக முக்கிய காரணமாக இருந்து வரும் ‘டாஸ்மாக்’ ( Tasmac ) மூலம் தமிழக அரசுக்கு ரூ.45,856 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,829 கடைகள் வாயிலாக மதுபான வகைகளை விற்பனை செய்கிறது. மது வகை மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை மற்றும் மதிப்புக் கூட்டு வரி வாயிலாக, அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.
Also Read : 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் – வெளியான முக்கிய பரிந்துரைகள்..!!
அதன்படி, 2023 – 24ல் ஆயத்தீர்வை வாயிலாக, 10,774.28 கோடி ரூபாய்; மதிப்புக் கூட்டு வரியாக, 35,081.39 கோடி ரூபாய் என, மொத்தம், 45,856 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக, தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்க ( Tasmac ) குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இது, 2022 – 23ல், 44,121.13 கோடி ரூபாயாகவும், 2021 – 22ல், 36,050.65 கோடி ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.