விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சதுரகிரி செல்ல ( Chathuragiri ) பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ளும்படி தமிழக அரசு சுற்றறிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் வரும் 25 ஆம் தேதி வரை இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது
Also Read : ஈரான் அதிபர் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்..!!
அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 5 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சுற்றுலா ஸ்தலங்களுக்கு செல்ல உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.